LankaFiles தமிழ்
@LankaFilesTamil
#News | #SriLanka | #lka http://facebook.com/lankafilesfb http://tiktok.com/@lankafilestik
“ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள் சர்வதேச நீதித்துறை வழிமுறைகள் மூலம் நடத்தப்பட வேண்டும்” வடக்கு கிழக்கு சமூக இயக்கம் (NESM) பிராந்தியத்தின் 8 மாவட்டங்களில் ஏற்பாடு செய்த போராட்டத்தில், யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இணைந்தனர்.
வடக்கு, கிழக்கு தமிழர்கள் கோரும் சர்வதேச நீதி பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவு கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்திற்கு @UNSriLanka முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
"இது நாடா அல்லது இடுகாடா"" இலங்கையின் அனைத்து மனிதப் புதைகுழிகளும் சர்வதேச தரத்திற்கமைய அகழ்ந்து, வெளிப்படையான விசாரணைகள் நடத்தி, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமெனக் கோரி, மன்னார் மாந்தை சந்தியிலிருந்து, நாட்டின் 4வது பெரிய மனித புதைகுழியான திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வரை பேரணி.
இலங்கை சிறைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரியும், நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தியும், 'விடுதலை' என்ற தலைப்பில் கண்காட்சியும், முன்னாள் அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸின் கவிதை நூல் வெளியீடும் இடம்பெற்றது.
செம்மணி மனித புதைகுழியில் குழந்தையின் எலும்புக்கூட்டுடன் காணப்பட்ட சூப்பியுடனான போத்தல் குழந்தைக்கு பாலூட்டும் போத்தல் எனவும், அது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் கூறுகிறார். புதைகுழியிலிருந்து 81 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் நேற்று (ஜூலை 24) மேலும் 3 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அகழ்ந்த எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 76 ஆகும்.
"அம்பாறை-வீரமுனை, திருக்கோயில், திராக்கேணி, மட்டக்களப்பு என எங்கு தோண்டினாலும் மனித எச்சங்கள் வெளிப்படும்" வடக்கு, கிழக்கில் எங்கு மண்னை அகழ்ந்தாலும் தமிழினம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிவருமென @ITAKOrg எம்.பி., க.கோடீஸ்வரன் வலியுறுத்துகின்றார்.
கறுப்பு ஜூலையின் 42ஆவது நினைவேந்தல் நிகழ்வு ஜூலை 23ஆம் திகதி பொரளை மயானத்திற்கு முன்பாக வடக்கு-தெற்கு சகோதரத்துவ அமைப்பால் நடத்தப்பட்டது. #BlackJuly1983 #BlackJuly
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் எஸ். பாஸ்கரன் தலைமை வகிக்கும் காரைத்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள், 42 ஆண்டுகளுக்கு முன்பு அரச ஆதரவுடன் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் காரைத்தீவு கடற்கரையில் விளக்கேற்றி நினைவேந்தினர். #BlackJuly1983 #BlackJuly
"போலி சகோதரத்துவ நாள் வேண்டாம்!" தமிழ் இனப்படுகொலையின் 42ஆவது ஆண்டு நினைவு நாளில், JVP இளைஞர் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவை வேடிக்கையாக கொழும்பிலிருந்து வடக்கிற்கு ரயிலில் அனுப்பிய அரசாங்கத்தை, யாழில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவை கடுமையாக சாடியுள்ளது.




வவுனியா நகரசபைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக, தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில், 42ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. #BlackJuly1983




"மஹிந்த ராஜபக்ச விட்ட தவறை, ஜே.ஆர். ஜெயவர்தன விட்ட தவறை, அனுர குமார திசாநாயக்கவும் இன்று இருக்கின்ற பலத்தை பயன்படுத்தி செய்வாராயின் நாடு தான் விரும்பும் திசையில், தமிழர்களுக்கான ஒரு தீர்வு நோக்கி பயணிக்கும், அது தமிழர்களுக்கான சுயநிர்ணய தீர்வாக அமையும்" @ImShritharan எச்சரிக்கை
1983 ஆம் ஆண்டு கொழும்பின் மையப்பகுதியில் உள்ள பொரளை பேருந்து நிலையத்தில் ஒரு இளம் தமிழர் உயிருடன் எரிக்கப்பட்டதைக் காட்டும் புகைப்படத்திற்கு @uojusu உறுப்பினர்கள் இலங்கையின் கறுப்பு ஜூலை படுகொலையின் 42 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மலர்கள் வைத்து நினைவேந்தினர். #BlackJuly1983
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி இலங்கையின் மூன்றாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது, இன்று அகழ்வாய்வாளர்கள் 85வது எலும்புக்கூட்டை கண்டறிந்தனர். "இன்று 5 மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டன. கடந்த 3 நாட்களில் கண்டறியப்பட்ட மொத்த மண்டை ஓடுகளின் எண்ணிக்கை 20" சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன்
3 நாட்களுக்கு முன் எலும்புகள் கண்டறியப்பட்ட சம்பூர் கடற்கரையை இன்று பார்வையிட்ட மூதூர் நீதவான் எச்.எம். தஸ்னீம் பௌசான், அந்த பிரதேசம் முன்னர் மயானமாக பயன்படுத்தப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தும் அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் சிறுவர்களுடையது என நம்பப்படும் குறைந்தது ஆறு எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே நான்கு முதல் ஐந்து வயது சிறுவர்கள் உட்பட 80 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார். #Chemmanimassgrave
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், @ompsrilanka மற்றும் அதன் தலைமையை அதன் பரிந்துரைகளில் முன்னேற்றம் இல்லாமைத் தொடர்பில் பொறுப்பேற்க வைக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை @amnesty கோரியுள்ளது.




பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஏகமனதாக அறிவித்த விசாரணைக் குழுவின் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் Dr. ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார். "இது நமது அரசியலமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது"
Speaker of @ParliamentLK Dr. Jagath Wickramaratne announces the decision of the Committee of Inquiry that unanimously found suspended Sri Lanka chief of police Deshabandhu Tennakoon guilty of gross abuse of power. "This marks a historic moment in our constitutional journey"
ஜனாதிபதி கூறியது போல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணர, "அரசால் அரசை விசாரிப்பது" என்ற அடிப்படையில், அப்போதைய கிழக்குத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை, பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு எம்.பி., முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை
පාස්කු ප්රහාරය පිළිබඳ සත්යය හෙලිකරගැනීම වෙනුවෙන් ජනාධිපති කී පරිදි ‘රාජ්යය විසින් රාජ්යය පරීක්ෂාවට ලක් කිරීම’ සඳහා එකල නැගෙනහිර ආඥාපති ලෙසින් රාජ්යයේ කොටස්කාර මේජර් ජනරාල් අරුණ ජයසේකරට නියෝජ්ය ආරක්ෂක අමාත්යධුරයෙන් ඉල්ලා අස්වන මෙන් විපක්ෂයේ මුජිබර් රහුමාන් මන්ත්රී ඉල්ලයි.
"பரவலான மற்றும் திட்டமிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக வகைப்படுத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பாக இலங்கை மாறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்" என பரிந்துரைக்குமாறு @HRCSriLanka ஐ.நா. நிபுணர்கள் குழுவிடம் முன்மொழிவு.


