Ekam Sat (மோடியின் குடும்பம்)
@vijaylaxmisrik1
where there is HOPE, there is FAITH... where FAITH is, MIRACLES HAPPEN...
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல்

தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந் தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங் குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன் குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.

மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ் சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல்

வாழ்வா ருறவாய் மகிழ்வார் பலருந் தாழ்வார்க் கருளுத் தமனீ யலையோ பேழ்வா யரவும் பிறைவெள் ளிறகுஞ் சூழ்வார் சடையார் தொழுதே சிகனே.

ஆளா யயில்வே ளடியிற் பணிவார் கோளாற் பிறரைக் குறிசெய் தழியார் மாளார் சமனால் மறுகார் பகையால் மீளார் வினையால் வெருவா ரவமே

அனியா யமிதென் றவரே மடவார் துனியார் பவமுந் துயருங் களைவார் கனியார் முருகன் கழல்பெற் றிடுவா ரினியா ரினியா ரிவருக் கிணையே

காடும் மலையுங் கடலும் முருளச் சாடுந் தனிவே லுடையாய் சரணம் ஆடும் மயில்வே லரசே சரணம் பாடும் வரதற் பரனே சரணம்.

நனவிற் படுநல் லுலகத் தனையும் கனவிற் பொருளாய்க் கருதா வெனைநீ வினவிச் சொலுநா ளுளதோ விதியைச் சினவிச் சிறையிட் டருதே சிகனே.

வரிவேல் விழியாம் வலுவீ சுமினார் புரிவே ளையிலே பொருதிக் களைவாய் பரிவே டஞ்சூழ்ந் ததுபோ லவுணர்த் தெரிவேன் முனைமே லெறிசே வகனே

மடிமைப் படினும் மயலுற் றிடினும் அடிமைக் குரியா ரருள்சே ருவரே குடிமைக் கிலதோர் கொடிவெற் பிணையிற் படிமைப் புயலே பரிவா யினியே.

தெரியத் தெரியச் செயலுற் றிடுமுன் துரியப் பொருளைச் சொலுநா ளுளதோ கரிபெற் றிடுமின் கணவா குறமின் பரியப் பெரிதும் பணியுத் தமனே

என்னே ரமதோ தெரியா திறனாம் அன்னே ரமதொன் றாகா தெனமுன் சொன்னேன் மனனே துவலோ துவலோ தன்னேர் குகனற் சலசச் சரணே.

என்னே ரமதோ தெரியா திறனாம் அன்னே ரமதொன் றாகா தெனமுன் சொன்னேன் மனனே துவலோ துவலோ தன்னேர் குகனற் சலசச் சரணே.

பொறியும் புலனும் புதிதும் முதிதும் குறியுங் குணமுங் குலமுங் குடியும் நெறியும் பரிசொன் றுமிலா நிலையா னறியுந் தரமோ வயில்வே லவனே.

பொன்னா வல்கெடப் பொழியும் புகழோ ரின்னா ரினியா ரெனவெண் ணுவரோ துன்னார் கிளைவே ரறவே தொடுவேல் மன்னா பொதுவாய் மழையும் பெயுமே

பண்டே தொடர்பற் றொடுசுற் றமெனும் வெண்டே ரைமகிழ்ந் துவிழித் திடவோ கண்டே குறமங் கைதனைக் களவில் கொண்டே கடிதே கியகொற் றவனே.

வளையுஞ் சகமா யைமயக் கில்விழுந் துளையுந் துயரின் னுமுணர்ந் திலையே வளைகொண்ட பிரான் மருகா வடுசூர் களையுஞ் சினவெங் கதிர்வே லவனே.

வள்ளைக் குழைமங் கையர்சிங் கியிலே கொள்ளைப் படுமென் குறைதீ ருமதோ வெள்ளைத் தனிமால் விடையன் புகழும் பிள்ளைப் பெருமா ளெனும்பெற் றியனே

கள்ளம் படுகட் கடையார் கடைதே ருள்ளம் படலென் றகலக் களைவாய் பள்ளம் படுநீ ரெனவே பரிவின் வெள்ளம் படுநல் வழிவே லவனே.

உருகற் பகமென் றுனையே யடைவே னிறுகற் பகைவற் கிதமோ துவனோ தெறுகற் சிலைகொண் டெயில்செற் றிடுபூண் டறுகட் பணியன் தருபுத் திரனே.
