YOGESHWARAN V T
@YOGESHWARANVT1
Journalist | Follow to get Update On Parliament Of India,Delhi Happening's & Significance for TamilNadu Related and etc.
Clarify : நாணயமும்! சுவாரஸ்ய தகவலும்! “கலைஞர் 100” என சமீபத்தில் 100 ரூபாய் நாணயம் வெளியிடபட்டது. இதை 10,000 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் என திமுக கூறியுள்ளது. 100 ரூபாய் நாணயம் 10,000 ஆ?? என்பார்கள். ஏன் இவ்வளவு விலை? என்ன சொல்கிறது RBI ? விளக்கமாக எழுதியுள்ளேன்.

Parliament : “மருத்துவத்துறை” தமிழ்நாட்டிற்கு 2வது இடம்! 2024 ஆண்டில் மட்டும் “கிட்னி மாற்று அறுவை சிகிச்சை”அதிகம் மேற்கொண்டுள்ள மாநில பட்டியலில் தமிழ்நாடு 2ம் இடம் பிடித்துள்ளது. எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளை கொண்ட டெல்லி முதலிடம் - மத்திய அரசு @Subramanian_ma @mkstalin

Parliament : 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி 32 நாடுகளுக்கு சென்றுவர 362 கோடி செலவு! பிரதமர் மோடி 2021-2025 ஜூலை வரை 35 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் செய்துள்ளார். இதில், 3 பயணங்களை தவிர 32 பயணங்களுக்கு 362,16,71,776.47 ரூபாய் செலவாகியுள்ளது.




Parliament : பிரதமரின் 5 நாட்டு செலவு மட்டும் 67 கோடி! 2025 ஆண்டில் பிரதமர் மோடி, 17 நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், 5 நாடுகளுக்கு மட்டுமான செலவு 67,07,73,894.47 கோடி. மீதமுள்ள நாடுகளின் செலவு ( Bills Under Settlement )

Parliament : 60% நாட்களை அட்டெண்ட் செய்த வைகோ! இன்றுடன் பதவி காலம் முடிந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கடந்த 6 ஆண்டுகளில் 178 நாட்கள் நாடாளுமன்ற தொடரில் கலந்து கொண்டுள்ளார். மொத்த நாட்களில் 60.33% நாட்கள் அவை நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்! அவருக்கு வயது 81.

Parliament : 6 ஆண்டுகளில் 92 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் சென்றுள்ள அன்புமணி! இன்றுடன் பதவி காலம் முடிந்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கடந்த 6 ஆண்டுகளில் 92 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற தொடரில் கலந்து கொண்டுள்ளார். 66% நாட்கள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை!

Source : சி.பி ராதாகிருஷ்ணன், குடியரசு துணை தலைவர் ஆகிறாரா ? Vice President வேட்பாளர் தேர்வை பாஜக மேற்கொண்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிரா-ல் ஆளுநர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. File Photo :

Parliament : ஒரே ஆண்டில் மட்டும் 37 லட்சம் நாய்கடி சம்பவங்கள் பதிவு! நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 37,17,336 நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 54 மனிதர்களின் உயிரிழப்பு ரேபிஸ் தாக்கம் என சந்தேகிக்கப்படுகிறது என மக்களவையில் கால்நடைத்துறை அமைச்சகம் விளக்கம். @KartiPC

Big One : குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா! குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தங்கர்

Parliament : சென்னையில் விமானம் மீது பறவை மோதல்! சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் Bird Hit சம்பவங்கள் 205 முறை பதிவு. நாடு முழுவதும் 2,824 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.நாட்டிலே அதிகபட்சமாக டெல்லியில் 6 ஆண்டுகளில் 695 சம்பவங்கள் பதிவாகியுள்ளது -Ministry Of Civil Aviation Source - RS

Parliament : “கீழடி” அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏன் மாற்றம்! - மத்திய அரசு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் என்பது நிர்வாகம் சார்ந்தது என மக்களவையில் விளக்கம்.மேலும், கீழடி ஆய்வு அறிக்கையை நிராகரிக்கவில்லை என மத்திய கலாச்சார அமைச்சகம் கூறியுள்ளது. @ThamizhachiTh



Top Source : காங்கிரஸ் மறுப்பு! தவெக, காங்-உடன் கூட்டணி பேசுகிறது என்ற செய்திக்கு காங்.மூத்த தலைவர்கள் மறுப்பு. தேர்தல் காலங்களில் இதுபோன்ற வதந்தி வருவது இயல்பு தான்!இது திமுக-காங் உறவை பாதிக்காது என்கிறார்கள்.திமுக-காங் கூட்டணி ஜனநாயகத்திற்கான கூட்டணி என்கிறார்கள்.
Ministry Of Railway : 7 ஆயிரம் இடங்களில் இல்லை! நாட்டில் 18,477 லெவல் கிராசிங்கள் உள்ளது. இதில்,விபத்தை தடுக்கும் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது 11,089 (LC)மட்டுமே உள்ளது. அப்படியென்றால், செம்மங்குப்பம் ரயில்வேகிராசிங் போல நாட்டில் 7,388 (LC)களில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் இல்லை.
Ministry Of Railway : தமிழ்நாட்டில் ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லை! 2019 ஜன 31-லே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்களும் மேம்பாலம் / சுரங்க பாலம் மூலம் மூடப்பட்டது என மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார் (Source File)

Source : ஜூலை 25ல் பதவியேற்கிறார் கமல்ஹாசன்! மாநிலங்களவை தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25ல் நாடாளுமன்றத்தில் பதவியேற்கிறார். இதற்கான வேலைகளை, மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் டெல்லியில் கவனித்து வருகிறார்.
Cabinet Approval : பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4வழி சாலைக்கு ஒப்புதல்! மதுரை-தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 1,853 கோடி ரூபாய்க்கு 46.7 கி.மீ தூரம் 4 வழி சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது @KNavaskani


Update : அன்புமணி வீட்டில் இல்லை! டெல்லி வந்துள்ள அன்புமணி நேற்று காலை (ஜூன் 30) வீட்டில் இருந்து புறப்பட்டு விட்டார். அதன் பிறகு வரவில்லை! அவர் சென்னை சென்று இருப்பார் என பணியாளர்கள் சொல்கிறார்கள். எதற்காக டெல்லி வந்தார் என்பது சஸ்பென்ஸ்!! Video: Government bungalow-Delhi
Election 2026 : மோகன் குமாரமங்கலம் நியமனம்! 2026ல் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளராக மோகன் குமாரமங்கலம் நியமனம் செய்துள்ளது அகில இந்திய காங்கிரஸ். @MKumaramangalam

Source : தேர்தல் ஆணையத்தில் அன்புமணி! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை (30.06.2025) பிற்பகல் 12.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் செல்கிறார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல். #AnbumaniRamadoss_Delhi (Waiting For Final Confirmation)
நீட் தேர்வு முடிவு - தமிழக மாணவர்கள் சாதனை 2025ம் ஆண்டுக்கான நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முதல் 100 இடங்களில் 6 தமிழக மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 26 , 50 , 61 ,63 ,78 ,88 உள்ளிட்ட (ரேங்க்) இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர் Copy 👇



Covid Update ⚠️ கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது! May 31 - 2025 Total Active Case - 3,395 Death Since Yesterday - 4 Discharged - 265 Positive (Single Day 30th May) - 685 Source - MoHWF