வைரமுத்து
@Vairamuthu
கவிஞர் - பாடலாசிரியர்
நாடாளுமன்றம் சார்ந்து புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நண்பர்களையும் குறிப்பாக இருவரையும் பாராட்டுகிறேன் ஒருவர் நாடாளுமன்றத்தை நிறைவுசெய்கிறவர்; இன்னொருவர் நாடாளுமன்றத்தில் நுழைவு செய்கிறவர் மனித உரிமைகளுக்கும் தமிழ் தமிழர் தமிழ்நாட்டு உரிமைகளுக்கும் சங்கு முழங்கிய…

பாட்ஷா படத்தின் மறு வெளியீடு சில தகவல்களைப் பரிமாறுமாறு கூறுகிறது "எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்கோ" என்றபாட்டு அவசரம் கருதி எட்டே நிமிடத்தில் எழுதப்பட்டது "தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு" என்றபாட்டு ஆண் குரலுக்காக மட்டும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு ஜேசுதாசால்…

என்னரும் சகோதரர் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திருக்குவளைக் கலைஞரின் திருச்செல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் மருத்துவமனை சேர்ந்தார் என்ற செய்திகேட்டுச் சிந்தை உடைந்தேன் மருத்துவர்களின் உள்வட்டாரத்தை உசாவி அவருக்கு இடர் ஒன்றுமில்லை என்று அறிந்தபிறகுதான் அமைதி அடைந்தேன்…

கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" நூலில் கையொப்பமிட்டேன் கோவை மக்களைக் கும்பிட வேண்டும் ஒரு நதியைப்போல் நீண்ட வரிசை; கரையைப்போல் கட்டுப்பாடு; தாமரை இலையில் ஓடும் தண்ணீர்த் துளியைப்போல் ஓசையற்ற நகர்வு; குடும்பம் குடும்பமாய்க் கூடிவந்த மக்கள்…

கொங்கு மண்டலத் தங்க மக்களே! கோவை வருகிறேன் நாளை 20 ஜூலை ஞாயிறு காலை 11 மணி முற்பகல் வேளை கொடிசியாவில் நிகழும் புத்தகத் திருவிழாவில் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலில் கையொப்பமிடுகிறேன் பெரியோர் வருக பெண்டிர் வருக இளையோர் வருக இனியோர் வருக கடைசிப் புத்தகம் தீரும்வரை அல்லது…

அழகிய பாடல் ஒன்று பதிவானது நேற்று என்னடி பெண்ணே என்னை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய் என்பதே உள்ளடக்கம் ஆண்டாண்டுதோறும் அனுபவித்து வரும் ஆண் வலிதான் வலி பழையதே ஆயினும் வார்த்தைகளால் புதியது செய்வதே கலை பல்லவி பாடுகிறது இப்படி: "ஓ மரங்கொத்திப் பறவையே மனதைத் துளைக்காதே நிழலை…

ஜூலை 13இல் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதே நாளில் ஆளுநர் மாளிகையில் ஒரு விழா நடந்ததாய்க் கேள்விப்பட்டேன் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் 944ஆம் திருக்குறள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகத்தில் இல்லாத குறளை யாரோ…

"கெவி" மலைஜாதி மக்களின் கண்ணீரைப் பிளந்துபார்க்கும் கதை அவர்களின் வாழ்க்கையை வருத்தப்படும் வார்த்தைகளால் வடித்திக்கிறேன் உயிர்கலந்து பாடியிருக்கிறார் தேவா வாசித்துப் பாருங்கள்; நேசித்துக் கேளுங்கள்: "மா மலையே – எங்க மலைச் சாமியே ஓம் மடியில் – எங்க உசுரு கெடக்குதே இங்க ஒரே…
படிக்காத காமராசர் பள்ளிகள் செய்தார் வீடுகட்டாத காமராசர் அணை கட்டினார் புத்தகம் எழுதாத காமராசர் நூலகம் திறந்தார் கையில் காசு வைத்துக்கொள்ளாத காமராசர் ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார் மற்றவர்க்கு நாற்காலி தந்து தன் பதவி தான்துறந்தார் கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும்…

நேற்று நிகழ்ந்த "வள்ளுவர் மறை வைரமுத்து உரை" வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பப்பட்ட செயற்கை நுண்ணறிவுக் காணொலியை நீங்களும் காணலாமே @CMOTamilnadu | @mkstalin #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
முத்தமிழறிஞரே! முதல் தமிழாசானே! ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலை உங்கள் நினைவிடம் சேர்க்கிறேன்; நெஞ்சு நிறைகிறேன் அப்பாவின் சட்டையை அணிந்துகொள்ள ஆசைப்படும் குழந்தையைப்போல நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு நானும் எழுதியிருக்கிறேன் உரையாசிரியர் பட்டியலில் சேர்வதைவிட உங்கள்…
நாளை வருகிறது நமது நாள் #திருவள்ளுவர் | #திருக்குறள் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ இந்தக் குறளுக்கு என்ன சொல்கிறது வள்ளுவர் மறை வைரமுத்து உரை? #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
வள்ளுவர் மறை வைரமுத்து உரை இன்பத்துப்பாலில் 250 குறள்கள்; அத்துணையும் கவிதைகள் இதோ ஒரு கவிதையின் உரையைச் சுவைக்கிறீர்களா? #திருக்குறள் #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை
ஜூலை 13இல் நிகழவிருக்கும் வள்ளுவர் மறை வைரமுத்து உரை விழாகுறித்து இரண்டு ஐயங்கள் நிலவுகின்றன ஒன்று: காவல்துறையின் கட்டுப்பாடுகள் கெடுபிடிகள் இருக்குமா; அரங்குக்குள் எளிதாக நுழைய முடியுமா என்பது என் விளக்கம்: ஐயப்பட வேண்டாம்; அச்சப்பட வேண்டாம் கெடுபிடிகள் ஏதுமின்றி…

மீசைத் தமிழர் என்று ஆசைத் தமிழர்களால் அழைக்கப்பட்ட பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தியால் நெஞ்சம் ஒருகணம் நின்று துடித்தது தன் மொத்த வாழ்க்கையை முத்தமிழுக்கே காணிக்கையாக்கிய மாணிக்கத் தமிழர் வா.மு.சேதுராமன் எண்ணம் சொல் செயல் யாவிலும் தனித்தமிழையே…

வள்ளுவர் மறை வைரமுத்து உரை எப்படி இருக்கும்? இதோ... ஒரு பதச்சோறு #திருக்குறள் | #திருவள்ளுவர் #வள்ளுவர்மறை_வைரமுத்துஉரை