G.K.Vasan
@GK__Vasan
Official Handle of Tamil Maanila Congress President G.K.Vasan MP | Prosperous Tamil Nadu. Stronger India
After the programme in Thoothukudi, landed in Tiruchirappalli to a warm welcome by various dignitaries. Looking forward to tomorrow’s programme at Gangaikonda Cholapuram.
நம் பாரதப்பிரதமர் மாண்புமிகு #நரேந்திரமோடி அவர்களை திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றபோது... @PMOIndia @narendramodi #welcomemodiji

#சோழர்காலத்து பெருமையை, வலிமையை, ஆன்மிகத்தை போற்றும் விதமாக #கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருகை தரும் @PMOIndia @narendramodi அவர்களை தஞ்சை தரணி உள்ளிட்ட தமிழ்நாடே வரவேற்று, சோழர் காலத்து வரலாற்றுப் புகழைப் பறைசாற்றுவோம். முதலாம் இராஜேந்திர சோழன் அவர்களின் வரலாறு போற்றுதலுக்குரியது.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், #பாட்டாளிமக்கள்கட்சி நிறுவனருமான ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு 87 வது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் நலன் காக்கவும் பணியாற்ற நல்ல உடல்நலத்துடன் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

மத்திய அரசும், தமிழக அரசும் – கோவை மாவட்டத்தில் எண்ணெய் குழாயை சாலையோரமாக அமைக்க தமிழக #விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் செயல்படுத்தும் திட்டங்கள் #விளைநிலங்களைப் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசு – அரசுப்பள்ளிகளின் கட்டிடங்களை தரமானதாக வைத்திருக்கவும், ஒதுக்கும் மதிப்பீட்டுத் தொகை முறையாக முழுமையாக செலவிடப்படவும், அரசுப்பள்ளிகளை அனைத்து தரப்பு குடும்பத்தினரின் பிள்ளைகள் நாடி வரவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை கண்டிக்கவும், மீனவர்களையும், படகையும் மீட்கவும் மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இன்று இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்று உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப, மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்
சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. தமிழக அரசு, பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து ஆலை மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக முன்னாள் முதல்வரும், #திமுக வின் தலைவராக இருந்த கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் மூத்த சகோதரருமான திரு. மு.க. முத்து அவர்கள் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். #RIPMKMuthu

தமிழக அரசே ஏழைக்குடும்ப சிறார்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் உடல்நலனிலும், எதிர்கால சமுதாயத்தினரின் நல்வாழ்க்கையிலும் அக்கறை இருக்குமேயானால் மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். #TASMAC
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் பெருந்தலைவர் #காமராஜர் நேர்மை, எளிமை தூய்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பெருந்தலைவரை பற்றி தவறான தகவல் பரப்புவதை மாற்றுக் கட்சியினர் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். #திமுக துணைப் பொதுச்செயலாளர் பெருந்தலைவரை பற்றி தவறாக பேசியது கண்டிக்கதக்கது
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய முதல் இந்தியர் #சுபன்ஷூ_சுக்லா அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து புறப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது மகிழ்ச்சிக்குரியது.

#பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் 123 வது பிறந்த நாளான இன்று (15.07.2025) எனது தலைமையில், சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில் பெருந்தலைவரின் பிறந்த நாள் பொதுக்கூட்ட நிகழ்வு #KamarajBirthday




இன்று 15.07.2025 செவ்வாய்க்கிழமை, #பெருந்தலைவர்_காமராஜரின் 123 வது பிறந்த நாளில், சென்னை, அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் உள்ள பெருந்தலைவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் வைக்கப்பட்டிருந்த #பெருந்தலைவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது


திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த அருவருக்கும் செயலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
மூத்த நடிகை திருமதி. #சரோஜாதேவி அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக போற்றப்பட்டவர். மத்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற பாராட்டுக்குரியவர்.

இன்று தமாகா திருப்பூர் புறநகர் வ. மாவட்டத் தலைவர் திரு.O.K. சண்முகம் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய போது. உடன் தமிழக #பாஜக முன்னாள் தலைவர் திரு. @annamalai_k அவர்களும், #அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் திரு. @KASengottaiyan அவர்களும்




#தமாகா(மூ) சார்பில் ஜூலை 15, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு #பெருந்தலைவர்_காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. த.மா.கா.வினரும், பொது மக்களும் திரளாக கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு புகழ் சேர்க்க வேண்டும்.

இன்று 11.07.2025, வெள்ளிக்கிழமை, புது டெல்லியில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது

